இந்தியா

Video: ஓடும் சரக்கு ரெயிலின் அடியில் சிக்கி கொண்ட பெண்.. நூல் இழையில் உயிர் பிழைத்த அதிசயம்

Published On 2025-01-07 21:03 IST   |   Update On 2025-01-07 21:03:00 IST
  • பெண் ஒருவர் சரக்கு ரெயிலின் அடியில் ஊர்ந்து சென்றபோது, ​​​​ரெயில் திடீரென நகரத் தொடங்கியது.
  • இதனையடுத்து அப்பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் அடியில் நுழைந்து தண்டவாளத்தை பெண் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது சரக்கு ரெயில் நகர தொடங்கியதால் அவர் தண்டவாளத்திலேயே படுத்துக்கொண்டார்.

ரெயில் செல்லும்போது அந்த பெண் தண்டவாளத்தில் படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

மதுராவில் இருந்து ஆக்ராவுக்குப் புறப்படுவதற்குத் தயாராக ஒரு சரக்கு ரயில் நடைமேடை 1 இல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தை கடக்க 2 பெண்கள் முயற்சி செய்தனர்.

பெண்களில் ஒருவர் சரக்கு ரெயிலின் அடியில் ஊர்ந்து சென்றபோது, ரெயில் திடீரென நகரத் தொடங்கியது. இதனையடுத்து அப்பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.

ரெயில் முன்னோக்கி நகரத் தொடங்கியதும், ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் சரக்கு ரெயிலை முன்னோக்கி நகரவிடாமல் நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

பொது மக்களின் அலறல் சத்தத்திற்கு பிறகும் சரக்கு ரயில் நிற்கவில்லை. அதிசயமாக, சரக்கு ரெயில் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. இதனால் நூல் இழையில் அப்பெண் உயிர் பிழைத்தார்.

Tags:    

Similar News