இந்தியா

33 மணி நேர போராட்டம் வீண்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

Published On 2025-01-07 18:58 IST   |   Update On 2025-01-07 18:58:00 IST
  • இளம்பெண் மயக்கத்தில் இருந்ததால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
  • 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்புக் குழு இளம்பெண்ணை மீட்டது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டேராய் கிராமத்தில் 18 வயது இளம்பெண் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். பூஜ் தாலுகாவில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் குடும்பத்தினர் ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 490 அடி ஆழத்தில் இளம்பெண் சிக்கி உள்ளதாக புஜ் துணை ஆட்சியர் ஏ.பி.ஜாதவ் தெரிவித்தார். உள்ளூர் மீட்புக் குழு தொடர்ந்து ஈடுபட்டனர்.

இளம்பெண் மயக்கத்தில் இருப்பதால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

சிக்கியுள்ள பெண்ணை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை குழுக்களும் அழைக்கப்பட்டன.

இந்நிலையில், சுமார் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்புக் குழுவினர் இளம்பெண்ணை மீட்டனர். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News