பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
- பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- முன்னாள் ஜனாதிபதி மகள் சர்மிஸ்தா முகர்ஜி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜி, நினைவிடம் கட்ட ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான மறைந்த பிரணாப் முகர்ஜியின் சமாதி அமைப்பதற்காக ராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்திற்குள் (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) ஒரு நியமிக்கப்பட்ட இடத்தை ஒதுக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாபாவுக்கு ஒரு நினைவிடத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு எனது இதயத்தின் மையத்தில் இருந்து நன்றி. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க சென்றேன்.
இது மிகவும் நேசத்துக்கு உரியது. பிரதமரின் இந்த எதிர்பாராத செயலால் மிகவும் மகிழ்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.