இந்தியா

VIDEO: உ.பி.யில் சடலத்தின் கால்களில் கயிறு கட்டி இழுத்து செல்லும் மருத்துவ ஊழியர்கள்

Published On 2025-01-06 21:58 IST   |   Update On 2025-01-06 21:58:00 IST
  • இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
  • இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு வெளியே சடலத்தின் கால்களை பிடித்து 2 ஆண்கள் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் என்று கூறப்படும் 2 நபர்கள் சடலத்தின் கால்களில் துணியால் கட்டிக்கொண்டு பிரேதப் பரிசோதனை கூடத்திற்குள் நுழைகிறார்கள்.

இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News