டெல்லி மெட்ரோ ரெயிலில் தலைமுடி பிடித்து சண்டையிட்ட பெண்கள்- வீடியோ வைரல்
- பல்வேறு வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் பொதுமக்களுக்காக அரசு மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மெட்ரோ ரெயில்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ரெயில்களில் தற்போது பயணிகளின் வாக்குவாதம், அடிதடி போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகுகின்றன.
அதுவும், டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் வாக்குவாதம், ஆபாச சேட்டை, இளம் ஜோடிகளின் முத்தமழை, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண்கள் போன்ற பல்வேறு வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ, இருக்கைக்காக இரு பெண்கள் தலைமுடி பிடித்து சண்டையிட்டுக்கொள்ளும் காட்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட வீடியோவில், ஒரு பெண் இருக்கை குறித்து கேள்வி கேட்க, மற்றொரு பெண் என் மடியில் உட்கார் என்று ஆவேசமாக சொல்கிறார். இதனை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகிறது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இப்போதெல்லாம் மெட்ரோ பயணிகளின் நடவடிக்கை கவலையாக உள்ளது என்றும் மற்றொருவர், இது கவலைக்குரிய விஷயம் என்றும் பதிவிட்டனர்.