இந்தியா

ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெறலாம் - கெஜ்ரிவால்

Published On 2025-01-06 19:52 IST   |   Update On 2025-01-06 19:52:00 IST
  • டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது.
  • 'ஆம் ஆத்மி கட்சி' ஒரு நேர்மையான கட்சி என்று கெஜ்ரிவால் கூறுகிறார்.

தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற வாய்ப்பிருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "டெல்லி முதல்வர் அதிஷி கைது செய்யப்படுவார் என்றும், சில ஆம் ஆத்மி தலைவர்களின் வீட்டில் ரெய்டு நடக்கும் என்றும் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தேன்.

அடுத்த சில நாட்களில் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. இந்தக் கைதுகளும் சோதனைகளும் அவர்களின் பீதியின் விளைவுதான்

இதுவரை அவர்கள் எங்களுக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்கவில்லை, எதிர்காலத்திலும் அவர்கள் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள். 'ஆம் ஆத்மி கட்சி' ஒரு நேர்மையான கட்சி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News