இந்தியா
அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திச் சென்ற  தம்பி!..

அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திச் சென்ற தம்பி!..

Published On 2025-03-29 20:22 IST   |   Update On 2025-03-29 20:32:00 IST
  • யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
  • ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேசம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கொய்ராவ்னா பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி. இவரது 22 வயது மகளுக்கு யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது மகளையும், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளையும் காணவில்லை என கீதா தேவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

யோகேஷின் இளைய சகோதரன் ராஜா தனது மகளை கடத்திச் சென்றதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News