இந்தியா

VIDEO: பூமியைத் தொட்ட இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை.. எங்கு தெரியுமா?

Published On 2025-01-05 20:32 IST   |   Update On 2025-01-05 20:32:00 IST
  • 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த இந்த ஆண் குழந்தை 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் பிறந்தது.
  • மூத்த சகோதரி, தாய் ராம்சிர்மாவி மற்றும் தந்தை ரெம்ருத்சங்கா மகிழ்ச்சியில் உள்ளனர்.

1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர்நதுள்ளது. 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர்.

அந்த வகையில் இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை தென் கிழக்கு மாநிலமான மிசோரமில் பிறந்துள்ளது.

மிசோரமில், ஜனவரி 1, 2025 அன்று அதிகாலை 12:03 மணிக்கு ஐஸ்வாலின் டர்ட்லாங்கில் உள்ள சினோட் மருத்துவமனையில் நாட்டின் முதல் ஜென் பீட்டா குழந்தை பிறந்துள்ளது. 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த இந்த ஆண் குழந்தை 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் பிறந்தது. இது ஒரு புதிய தலைமுறை சகாப்தத்தின் தொடக்கமாகும்.

பிரான்கி [Frankie] என்று பெயரிடப்பட்ட இந்த ஆண் குழந்தை பிறக்கும்போது 3.12 கிலோ எடையுள்ளதாகவும், எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சினோட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முதல்  ஜென் பீட்டா குழந்தை பிரான்கி பிறந்ததில் அவரது மூத்த சகோதரி, தாய் ராம்சிர்மாவி மற்றும் தந்தை ரெம்ருத்சங்கா மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த குடும்பம்  ஐஸ்வாலில் உள்ள கிழக்கு கட்லா பகுதியில் வசிக்கிறது.

"ஜென் பீட்டா" என்ற சொல் மார்க் மெக்ரிண்டில் என்ற அறிஞரால் 2025 மற்றும் 2039 க்கு இடையில் பிறந்த குழந்தைகளை விவரிக்க உருவாக்கப்பட்டது. 

Tags:    

Similar News