இந்தியா

பட்ஜெட் 2025- 26 : ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம்

Published On 2025-02-01 11:51 IST   |   Update On 2025-02-01 11:51:00 IST
  • அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 75,000 இடங்கள் சேர்க்கப்படும்.
  • நடப்பாண்டில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சுமார் 2000 டே கேர் புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயம், மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-



* அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 75,000 இடங்கள் சேர்க்கப்படும்.

* அடுத்த ஆண்டில் மட்டும் சுமார் 10,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும்.

* அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

* நடப்பாண்டில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சுமார் 2000 டே கேர் புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

* ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும். முதன் முறையாக இத்தகைய திட்டம் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* இ-ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

* Swiggy, Zomato ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்கள் 1 கோடி பேர் பயன்பெறுவர் என்றார்.

Tags:    

Similar News