பட்ஜெட் 2025-26: மருத்துவ துறையிலும் முத்ரா கடன், சுய உதவிக்குழுக்களுக்கு கிரெடிட் கார்டு
- தாய் மொழியிலேயே மாணவர்களுக்கான பாடங்களை டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
- இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:
* நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட் பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்.
* தாய் மொழியிலேயே மாணவர்களுக்கான பாடங்களை டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
* இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலம் 8 கோடி குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
* ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு புதிய இலக்குடன் செயல்படுத்தப்படும்.
* முத்ரா கடன் மருத்துவ துறைக்கும் விரிவுபடுத்தப்படும்.
* தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பீகாரில் அமைக்கப்படும்.
* இந்தாண்டு நடுத்தர மக்களுக்கு குறைந்தவிலையில் 40,000 வீடுகள் கட்டித்தரப்படும்.
* நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
* மாநில அரசுகளுடன் இணைந்து புதிதாக 50 சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்.
* விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.
* இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
* சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் வகையில் கிராமின் கிரெடிட் கார்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.