இந்தியா
தெலுங்கானாவில் எம்.எல்.சி பதவிக்கு விஜயசாந்தி மனு தாக்கல்
- தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருப்பதி:
பிரபல நடிகை விஜய சாந்தி. தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை விஜயசாந்தி நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.