விளையாட்டு

கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் கலவர சூழல்: கொலம்பிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் கைது

Published On 2024-07-16 05:15 GMT   |   Update On 2024-07-16 05:15 GMT
  • போட்டியை காண ஏராளமானோர் முறையான டிக்கெட் இன்றி மைதானத்திற்குள் நுழைய முற்பட்டதாக தெரிகிறது.
  • 71 வயதான ரமோன் 2015 முதல் கொலம்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.

அர்ஜென்டினாவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான கோபா அமெரிக்கா இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியை காண ஏராளமானோர் முறையான டிக்கெட் இன்றி மைதானத்திற்குள் நுழைய முற்பட்டதாக தெரிகிறது. இதனால் போட்டிக்கு முன்பே மைதானத்தில் கலவர சூழல் உருவானது.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் தாமதமானது. இறுதியில் ரசிகர்களை சோதனைச் சாவடிகள் வழியாக உள்ளே அனுமதிக்க முடிவு செய்தனர்.

திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், எண்ணற்ற ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைவுச்சீட்டு இல்லாமல் நுழைந்து நிகழ்வை "களங்கப்படுத்திய" சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக அமைப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், மைதானத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக கொலம்பியா கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹார்ட் ராக் மைதானத்தில் நடந்த சம்பவத்துக்கு ரமோன் ஜெசுரன் மற்றும் அவரது மகன் ரமோன் ஜமில் ஜெசுருன் ஆகியோர் ரசிகர்களை தடுத்து வைத்தது தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

71 வயதான ரமோன் 2015 முதல் கொலம்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். மேலும் கோபா அமெரிக்கா போட்டியை நடத்தும் தென் அமெரிக்க கால்பந்தின் நிர்வாகக் குழுவான CONMEBOL-இன் துணைத் தலைவராக உள்ளார்.

Tags:    

Similar News