கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவது சந்தேகம் - வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2025-01-27 11:15 IST   |   Update On 2025-01-27 11:15:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார். இதனால் பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் தான் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது நியூசிலாந்தை சேர்ந்த மருத்துவர் ரோவன் ஸ்கௌடன் உதவியுடன் பும்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் பும்ரா 100% உடற்தகுதியுடன் இருந்தால் அது ஒரு அதிசயம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பும்ராவின் மருத்துவ அறிக்கைககள் மருத்துவர் ரோவன் ஸ்கௌடனிடம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை பொறுத்து சிகிச்சைக்காக பும்ராவை நியூசிலாந்திற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பும்ரா உடற்தகுதி பெறாவிட்டால் ஹர்ஷித் ராணா அல்லது சிராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறுவர் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News