கிரிக்கெட் (Cricket)
null

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி

Published On 2024-12-22 14:53 GMT   |   Update On 2024-12-22 15:41 GMT
  • பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்
  • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

315 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 26.2 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News