
ஐ.பி.எல். 2025: முதல் போட்டியும், மும்பை அணியும்.. 13 ஆண்டுகளாக தொடரும் தோல்வி
- ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஐ.பி.எல். தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 200-க்கும் அதிக ரன்களை அடித்தன. எனினும், ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.
இதன் காரணமாக நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. எனினும், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வெற்றி மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி தான் வெற்றி பெற்று வருகிறது.
முன்னதாக 2012-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. அதன்பிறகு நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல். தொடர்களில் இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி மட்டுமே வெற்றி பெற்று வருகிறது.