ஐ.பி.எல்.(IPL)
SRH 300 ரன் அடிக்க வாய்ப்புள்ள போதிலும், பந்து வீச்சை தேர்வு செய்தது ஏன்?- ரிஷப் பண்ட் சொல்லும் காரணம்..!

SRH 300 ரன் அடிக்க வாய்ப்புள்ள போதிலும், பந்து வீச்சை தேர்வு செய்தது ஏன்?- ரிஷப் பண்ட் சொல்லும் காரணம்..!

Published On 2025-03-27 19:27 IST   |   Update On 2025-03-27 19:27:00 IST
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 300 ரன்கள் அடிக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
  • அப்படி இருந்தும் ரிஷப் பண்ட் அவர்களிடம் முதலில் பேட்டிங்கை கொடுத்துள்ளது வியப்பு.

ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

பொதுவாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 300 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது எனக் கருதப்படுகிறது. இதனால் ஐதராபாத் மைதானத்தில் அவர்களுக்கு எதிராக டாஸ் வெல்லும் அணி கட்டாயம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்பதுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

ஆனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் பண்ட் டாஸ் வென்று ஐதராபாத் அணியிடம் பேட்டிங்கை கொடுத்துள்ளார். ஏன் ஐதராபாத் அணியிடம் பேட்டிங்கை கொடுத்தேன் என்பது குறித்து ரிஷிப் பண்ட் கூறியதாவது:-

முடிந்தவரை விரைவாக அவர்களை அவுட்டாக்கி, இலக்கை துரத்த முயற்சிக்க விரும்புகிறோம். ஆவேஷ் கான் ஃபிட் ஆகி அணியில் இணைந்துள்ளார். இதனால் ஷாபாஸ் அகமது விளையாடவில்லை.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை, நாங்கள் அதை சேஸிங் செய்வோம்.

இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News