கிரிக்கெட் (Cricket)

டி20 போட்டிகளில் அதிக சிக்சர் - ஜோஸ் பட்லர் சாதனை

Published On 2025-01-26 13:28 IST   |   Update On 2025-01-26 13:28:00 IST
  • டி20 தொடரில் விளையாடி வருகிறது.
  • இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்றிரவு சென்னையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்களை அடித்தது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 150 சிக்சர்களை அடித்த வீரர் ஆகியுள்ளார். இதுவரை 131 போட்டிகளில் விளையாடி இருக்கும் பட்லர் 151 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இதன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்சர்களை தாண்டிய நான்காவது வீரர் ஆகியுள்ளா பட்லர். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் மார்ட் டின் குப்தில் 173 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இன் முகமது வாசிம் 158 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News