இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து ஹசில்வுட் விலகல்?
- ஹசில்வுட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.
- இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்பேன்:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா தரப்பில் கேஎல் ராகுல், ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹசில்வுட் இன்றைய ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகினார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஹசில்வுட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.