டி20 போட்டியில் வீசிய 20 ஓவரும் சுழற்பந்து: சாதனை படைத்த பார்ல் ராயல்ஸ் அணி
- முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பார்ல்:
தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகமாக ஜோ ரூட் 78 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. பிரிட்டோரியா தரப்பில் வில் ஜாக்ஸ் 56 ரன்கள் அடித்தார்.
பார்ல் தரப்பில் ரூட், பிஜோர்ன் போர்டுயின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி சார்பில் 20 ஓவரையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவரையும் சுழற்பந்தாக வீசிய முதல் அணி என்ற சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்துள்ளது.