கிரிக்கெட் (Cricket)

பரபரப்பான சூழலில் முல்தான் டெஸ்ட்: 2வது இன்னிங்சிலும் பாகிஸ்தான் திணறல்

Published On 2025-01-27 00:33 IST   |   Update On 2025-01-27 00:33:00 IST
  • வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
  • பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

முல்தான்:

பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குடகேஷ் மோட்டி அரை சதம் கடந்து 55 ரன் எடுத்தார். வாரிகன் 36 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது. ரிஸ்வான் 49 ரன்னும், சவுது ஷகீல் 32 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 4 விக்கெட்டும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 66.1 ஓவரில் 2-வது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெய்ட் 52 ரன்கள் அடித்தார்.

பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து, 254 ரன்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 178 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை என்பதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News