கிரிக்கெட் (Cricket)

'டேய் பைத்தியம்..' ரசிகரை நொந்து கொண்ட அஸ்வின் - ஏன் தெரியுமா?

Published On 2025-01-27 11:02 IST   |   Update On 2025-01-27 11:02:00 IST
  • தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தினர்.

நாட்டின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. கடந்த சனிக்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தப் பட்டியலில் முன்னாள் இந்திய வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்ததை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 


அந்த வரிசையில், நடிகர் தனுஷ் ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்தப் பதிவில், "பத்மஸ்ரீ விருது வென்ற முதல் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர பத்ம விருது வென்ற நடிகர் அஜித் குமார் மற்றும் அனைவருக்கும் நடிகர் தனுஷ் தனது பதிவில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

எக்ஸ் தளத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்-க்கு ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்து கமென்ட் செய்தார். இவரது பதிவுக்கு ஒருவர் இந்தி மொழியில் பதில் அளித்து இருந்தார். அதில், நன்றி சொல்வதாக இருந்தால் ரோகித் சர்மாவுக்கு சொல்லுங்க என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த அஸ்வின், "டேய் பைத்தியம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News