சொன்னதை செய்த செஸ் சாம்பியன் குகேஷ்.. வைரலாகும் பஞ்சி ஜம்பிங் வீடியோ
- சென்னை திரும்பிய குகேஷ்-க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பஞ்சி ஜம்பிங் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.
உலக செஸ் வரலாற்றில் இளம் வயது சாம்பியன் குகேஷ். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். உலக செஸ் சாம்பியன் கோப்பையுடன் நேற்று சென்னை திரும்பிய குகேஷ்-க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது பயிற்சியாளருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குகேஷ் செய்த சாகசத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. செஸ் சாம்பியன் குகேஷ் பயிற்சியாளர் க்ரிகோர்ஸ் கஜெவ்ஸ்கி-க்கு பஞ்சி ஜம்பிங் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.
இதை நிறைவேற்றும் வகையில், அவர் சிங்கப்பூரில் பஞ்சி ஜம்பிங் செய்துள்ளார். சிங்கப்பூரின் ஸ்கைபார்க் சென்டாசாவுக்கு சென்ற குகேஷ் அங்கிருந்து பஞ்சி ஜம்பிங் செய்தார். அப்போது, "நான் தான் உலக சாம்பியன்" என்று அவர் கத்துகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள குகேஷ் அதற்கு, "நான் செய்துவிட்டேன்" என்று தலைப்பிட்டுள்ளார்.