பாரீஸ் ஒலிம்பிக்ஸ் அரங்கத்திலேயே 10 முறை வாந்தி எடுத்த கனடா வீரர்.. ஏன் தெரியுமா? - வீடியோ
- சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.
- 'நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன்'
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் கனடா நாட்டு வீரர் டைலர் மிஸ்லாஸுக் Tyler Mislawchuk நேற்று நடந்த ட்ரைலதான் போட்டியின் பின் 10 முறை வாந்தி எடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ட்ரைலதான் என்பது நீச்சல், ஓட்டம், மற்றும் சைக்கிளிங் ஆகிய 3 விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டியாகும். அந்த வகையில் நேற்று நடந்த டிராலதான் போட்டியில் சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.
முன்னதாக சியன் நதி மாசுபாடு காரணமாக ட்ரைலதான் போட்டிகள் தாமதமாக நடந்தது கவனிக்கத்தக்கது. மேலும் போட்டி தொடங்கும்போது, காற்றின் வெப்பநிலையானது 27 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்தது. எனவே மாசுபாடு மற்றும் வெப்பநிலை காரணமாக டைலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய கனேடிய வீரர் டைலர், நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன், அங்கு குளிர்காலத்தில் வெப்பநிலையானது மைனஸ் 50 டிகிரி வரை குறையும். ஆனால் நான் இப்போது சம்மர் ஒலிம்பிக்சில் விளையாட வந்துள்ளேன் என்று தனக்கு 27 டிகிரி செல்ஸியசே அதிகம் என்ற அர்த்தத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் 1:44:25 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து டைலர் 9 வது இடம் பிடித்துள்ளார்.பிரிட்டன் வீரர் அலெக்ஸ் யீ [ Alex Yee] 1:43:33 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றுள்ளார்.