உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஸ்வீடன் வீரர்.. அடுத்து செய்தது தான் ஹைலைட்! - வீடியோ
- ஒலிம்பிக் Pole Vault சாதனையே 6.10 தான் என்ற நிலையில், 6.25 மீட்டர் தாண்டி புதிய உலக சாதனையை டுப்ளண்ட்டிஸ் படைத்துள்ளார்.
- தற்போது சமூக வலைத்தளங்களில் டுப்ளண்ட்டிஸ் வைரலாவத்ற்கு அது மட்டும் காரணம் அல்ல
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது. மேலும் யூசுபின் ஸ்டைலான வெற்றி மற்றைய ஒலிம்பிக் வீரர்களுக்கும் பெரும் உந்துதலாக அமைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடத்த கோல் ஊன்றித் தாண்டுதல் [Pole Vault jump] போட்டியில் ஸ்வீடன் சார்பில் பங்கேற்ற தடகள வீரர் அர்மான்ட் டுப்ளண்ட்டிஸ் [Duplantis] தங்கம் வென்றார். ஒலிம்பிக் Pole Vault சாதனையே 6.10 தான் என்ற நிலையில், 6.25 மீட்டர் தாண்டி புதிய உலக சாதனையை டுப்ளண்ட்டிஸ் படைத்துள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் டுப்ளண்ட்டிஸ் வைரலாவத்ற்கு அது மட்டும் காரணம் அல்ல. மகிழ்ச்சியில் டுப்ளண்ட்டிஸ் இட்ட வெற்றி குறிதான் அனைவரையும் தற்போது கவர்ந்துள்ளது.
அதாவது, யூசுப் டிகேக் துப்பாக்கி சுடுதலில் நின்ற சிக்னேச்சர் பொசிஷனில் நின்ற டுப்ளண்ட்டிஸ் தனது கையை துப்பாக்கி போல் நீட்டி யூசுப்பை பிரதி செய்தார். இது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இதற்கு யூசுப் , புதிதாக தொடங்கப்பட்ட தனது எக்ஸ் பக்கத்தில் டுப்ளண்ட்டிஸை வாழ்த்தியுள்ளார்.