null
குடும்பம் தான் கோயில்.. உலகக் கோப்பையில் அசத்தும் ரச்சின் ரவீந்திராவுக்கு திருஷ்டி சுற்றிய பாட்டி
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் ரச்சின் ரவீந்திரா.
- அந்த தருணம் சிறுவயது கனவை நிறைவேற்றும் வகையில் இருந்தது.
நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் விதம், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. பரபரப்பான போட்டியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது.
அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்த நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் ரச்சின் ரவீந்திராவுக்கு அவரது பாட்டி திருஷ்டி சுற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது பற்றிய எக்ஸ் பதிவில், "இத்தகைய குடும்பத்தில் இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். தாத்தா, பாட்டிகள் தேவதைகளை போன்றவர்கள். அவர்களின் நினைவுகள் மற்றும் ஆசிர்வாதம் நம்மிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக ரச்சின் ரவீந்திரா இருந்து வருகிறார். கடந்த போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரச்சின் ரவீந்திரா, சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் தனது பெயரை கோஷமிட்ட தருணம் சிறுவயது கனவை நிறைவேற்றும் வகையில் இருந்ததாக தெரிவித்து இருந்தார்.