விளையாட்டு
எளிமையாக நடந்த நீரஜ் சோப்ரா-ஹிமானி திருமணம்: வைரலாகும் புகைப்படம்
- நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரு பதக்கங்கள் வென்ற 3வது இந்தியர் ஆவார்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் 2வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரு பதக்கங்கள் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
இந்நிலையில், தடகள வீரரான நீரஜ் சோப்ரா-ஹிமானி ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது என சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளேன். இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.