கிரிக்கெட் (Cricket)

துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா வேண்டும் - நிராகரிக்கப்பட்ட கம்பீரின் விருப்பம்

Published On 2025-01-19 14:53 IST   |   Update On 2025-01-19 14:53:00 IST
  • கேப்டன் ரோகித் சர்மா, அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்க விரும்பியதா தகவல்.
  • தலைமை பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்திய வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் என கம்பீர் விரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்க விரும்பியதால் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் நீண்ட விவாதம் நடந்ததாகவும் இறுதியில் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News