கிரிக்கெட் (Cricket)

குடும்பத்தினரை உடன் அழைத்து செல்வது குறித்து பிசிசிஐ செயலாளரிடம் பேச வேண்டும் - ரோகித்

Published On 2025-01-18 17:46 IST   |   Update On 2025-01-18 17:46:00 IST
  • இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.

இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

1. இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.

2. இனி இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது.

3. எந்தத் தொடர்களுக்கும் பிசிசிஐ-யின் முறையான அனுமதி பெற்றே இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்லவேண்டும்.

4. வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், இன்று சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு தொடர்பாக கேப்டன் ரோகித் மற்றும் பிசிசிஐ-ன் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு மைக் ஆன் செய்யப்பட்டது தெரியாமல் அஜித் அகார்கரிடம் பேசிய ரோகித், "இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று விதிமுறை குறித்து பிசிசிஐ செயலாளருடன் நான் பேச வேண்டும். அனைத்து வீரர்களும் என்னிடம் இதை பற்றி தான் கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 

Tags:    

Similar News