கேஎல் ராகுல் இல்லை.. டெல்லி அணியின் கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் தேர்வு- வெளியான தகவல்
- லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது.
- டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இந்த ஏலத்தில் லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்சர் படேல் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனை கருத்தில் கொண்டே டெல்லி அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.