கிரிக்கெட் (Cricket)

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் தீக்சனா- வைரலாகும் புகைப்படம்

Published On 2025-01-18 07:15 IST   |   Update On 2025-01-18 07:15:00 IST
  • பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் நட்சத்திர வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • சிஎஸ்கே அணி நிர்வாகமும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா. இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்சனா, தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்திகாவை திருமணம் செய்துக்கொண்டார்.

பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் நட்சத்திர வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு சிஎஸ்கே அணி நிர்வாகமும், சிஎஸ்கே ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த இவரை மெகா ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News