கிரிக்கெட் (Cricket)

சச்சினை போல ரோகித் சர்மாவும் ஓய்வு குறித்து முடிவு செய்வார்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

Published On 2025-01-18 11:20 IST   |   Update On 2025-01-18 11:20:00 IST
  • வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.
  • ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்.

மும்பை:

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தில் 6 இன்னிங்சில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல விராட் கோலியின் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.

இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்தனர். மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோகித் சர்மாவே முடிவு செய்வார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ததாக நம்புகிறேன். அது போன்று ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். ஓய்வு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவாகும்.

சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், அணிக்காக எந்த அளவுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது எல்லாம் சம்பந்தப்பட்ட வீரரின் தனிப்பட்ட முடிவை பொறுத்து அமையும். தேர்வுக் குழு உறுப்பினர்களின் கைகளில் இறுதி முடிவு உள்ளது என்பதே உண்மை. வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.

இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.

Tags:    

Similar News