கிரிக்கெட் (Cricket)

இன்னைக்கு கெத்தானவங்க இல்லடா நாங்க.. தொடர்ந்து 5-வது ஆண்டாக முதல் இடம்: ஆர்பிசி சாதனை

Published On 2025-01-18 08:52 IST   |   Update On 2025-01-18 08:52:00 IST
  • இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது.
  • ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடம் பிடித்த ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.

சமூக ஊடக பகுப்பாய்வு சோஷியல் இன்சைடர் மற்றும் எஸ்இஎம் ரஷ் படி ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், யூடியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மொத்த ஈடுபாடு 2024-ம் ஆண்டில் 2 பில்லியனை எட்டியுள்ளது. இது 2-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை விட 25% அதிகமாகும்.

ஆர்சிபியின் டிஜிட்டல் இருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகரித்து, ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.

ஆர்சிபி தனது வாட்ஸ்அப் ஒளிபரப்பு சேனலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தனது வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது, இது வாட்ஸ்அப்பில் அதிகம் பின்தொடரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.

Tags:    

Similar News