கிரிக்கெட் (Cricket)

பிற்போக்குத்தனமான முடிவு- ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது குறித்து ஜான்சன் கருத்து

Published On 2025-01-18 07:51 IST   |   Update On 2025-01-18 07:51:00 IST
  • ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக இலங்கை தொடரில் நியமித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • ஸ்மித்தை இப்படி தற்காலிக கேப்டனாக நியமிப்பது டிராவிஸ் ஹெட் போன்றவர்களுக்கு வாய்ப்பை இழக்கச் செய்கிறது.

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் பேட் கம்மின்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஸ்மித்தை இப்படி தற்காலிக கேப்டனாக நியமிப்பது டிராவிஸ் ஹெட் போன்றவர்களுக்கு வாய்ப்பை இழக்கச் செய்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பந்தினை சேதப்படுத்தியதாக இரண்டாண்டு கேப்டனாக செயல்பட தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக இலங்கை தொடரில் நியமித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதில் மீண்டும் கேப்டனாக புத்துயிர்ப்படையும் ஸ்மித்தை பல ரசிகர்கள் அவரது தலைமைப் பண்பை பாராட்டுகிறார்கள். நான் இவர்களுக்கு மத்தியில் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.

கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் இருக்கும் ஸ்மித்தை இப்படி தற்காலிக கேப்டனாக நியமிப்பது டிராவிஸ் ஹெட் போன்றவர்களுக்கு வாய்ப்பை இழக்கச் செய்கிறது. இது ஒரு பிற்போக்குத்தனமான முடிவாகும். எனது கருத்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் அணியின் நீண்ட கால முன்னேற்றத்தில் தேர்வுக்குழுவினர் தவறிழைத்து விட்டதை நினைத்து வெறுப்படைகிறேன்.

என்று ஜான்சன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News