கிரிக்கெட் (Cricket)

நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவு- மனம் திறந்த கருண் நாயர்

Published On 2025-01-18 13:28 IST   |   Update On 2025-01-18 13:28:00 IST
  • மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும்.
  • என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் கனவு இன்னும் கலையவில்லை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவு. அது இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதுதான் நான் விஜய் ஹசாரே தொடரில் அசத்தலாக பேட்டிங் செய்ய காரணம். மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.

இவ்வாறு கருண் நாயர் கூறினார்.

Tags:    

Similar News