கிரிக்கெட் (Cricket)

அசத்தலான கேட்ச் பிடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை - வைரலாகும் வீடியோ

Published On 2025-01-18 15:39 IST   |   Update On 2025-01-18 15:39:00 IST
  • ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
  • சோஃபி எக்லெஸ்டோன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று ஆஷ்லே கார்ட்னர் பிடித்தார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் நடைபெற்று வந்தது.

3 போட்டிகள் இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 309 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 222 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

இப்போட்டியில் 41 ஆவது ஓவரில் சோஃபி எக்லெஸ்டோன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் அட்டகாசமாக பிடித்தார்.

பெண்கள் கிரிக்கெட்டின் மிக கேட்ச்களில் இதுவும் ஒன்று என்று அந்த விடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News