இன்னிங்சில் பந்து பழையதாகும்போது சிராஜின் பந்துவீச்சு எடுபடவில்லை.. ரோகித் ஓபன் டாக்
- 2022 இல் இருந்து தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் சிராஜ் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்த முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
2022ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முகமது சிராஜ் தான் முதலிடத்தில் உள்ளார். 2022 இல் இருந்து தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் அவர் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், முகமது சிராஜ் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து பேசிய கேப்டன் ரோகித், "இன்னிங்சில் பந்து பழையதாகும்போது சிராஜின் பந்துவீச்சு எடுபடவில்லை. அதனால்தான் அவரை அணியில் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.