விளையாட்டு
null
டென்னிஸ் பீரிமியர் லீக் சென்னை அணி போராடி தோல்வி
- சென்னை ஸ்மாஷா்ஸ் 54-46 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு எஸ்ஜி பைப்பா்ைச வீழ்த்தியது.
- சென்னை அணி 3-வது போட்டியில் ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர் கொள்கிறது.
மும்பை:
இந்திய டென்னிஸ் சம்மேளனம் சார்பில் 6-வது சீசனுக்கான பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் சென்னை ஸ்மாஷா்ஸ் 54-46 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு எஸ்ஜி பைப்பா்ைச வீழ்த்தியது.
சென்னை ஸ்மாஷர்ஸ் 2-வது ஆட்டத்தில் நேற்று ஐதராபாத் ஸ்டிரைக்கர்சை எதிர் கொண்டது. இதில் சென்னை அணி 45-55 என்ற கணக்கில் போராடி தோற்றது. சென்னை அணி 3-வது போட்டியில் ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர் கொள்கிறது.