டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அல்காரசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Published On 2025-01-21 19:38 IST   |   Update On 2025-01-21 19:38:00 IST
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் தோல்வி அடைந்தார்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீரரும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 7 வீரரும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ஜோகோவிச் 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்து கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 சுற்றுகளை 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News