டென்னிஸ்
கத்தார் ஓபன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரனி ஜோடி, சீனாவின் ஜியாங் ஜின்யு-தைவானின் வூ பாங் ஜோடியுடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-5, 7-6 (12-10) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.