டென்னிஸ்
ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் ஜோடி
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் பிரான்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரான்சின் பெஞ்சமின் பொன்சி-ஹ்யூஜஸ் ஹெர்பர்ட் ஜோடி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி-போலந்தின் ஜேன் ஜிலன்ஸ்கி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் ஜோடி 6-3, 6-4 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.