டென்னிஸ்
கத்தார் ஓபன்: காலிறுதியில் இருந்து திடீரென விலகினார் மெத்வதேவ்
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் திடீரென விலகினார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என பெலிக்ஸ் கைப்பற்றினார். அப்போது மெத்வதேவ் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெலிக்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.