டென்னிஸ்
கத்தார் ஓபன்: அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, பிரிட்டனின் லாய்டு-ஜூலியன் கேஷ் ஜோடியுடன் மோதியது.
இதில் பிரிட்டன் ஜோடி சிறப்பாக ஆடி 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
ஏற்கனவே ரோகன் போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தொடரில் இருந்து வெளியேறியது நினைவிருக்கலாம்.