டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

Published On 2025-02-14 05:22 IST   |   Update On 2025-02-14 05:22:00 IST
  • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
  • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News