தமிழ்நாடு
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இயக்கப்படும் ஆந்திர சிறப்பு பஸ்களில் 10 சதவீத கட்டணம் தள்ளுபடி
- நாடு முழுவதிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
- இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நாடு முழுவதிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று காலை 5 மணி முதல் 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆந்திராவில் இருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும் திருப்பதி மத்திய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு பஸ்களில் அமராவதி, கருடா, இந்திரா ஏ.சி, ஏ.சி அல்லாத சூப்பர் அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் உள்ளன. ஏற்கனவே 100 சிறப்பு பஸ்களில் பாதி அளவு டிக்கெட் முன்பதிவு முடிந்து உள்ளது.
பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளன. இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.