செய்திகள்
அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்க வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்றும், தேர்தல் கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அ.தி. மு.க. (அம்மா அணி) சார்பில் கட்சியின் 46-ம் ஆண்டு தொடக்க விழா, எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் தர்மபுரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
விழா மேடையை நேற்று இரவு பார்வையிட்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சசிகலாவால் முதல்- அமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, தர்மபுரியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை நடத்த எங்களுக்கு காவல்துறை மூலம் தடைபோடுவது அதிகாரத்தின் உச்சத்தை காட்டுகிறது. இந்த அதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும். ஐகோர்ட்டின் உத்தரவை பெற்று இங்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்துகிறோம். எம்.ஜி.ஆர்.உருவாக்கிய அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவின் நியமனமும், அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனின் நியமனமும் சட்டப்படி செல்லும்.
சட்டப்படி அ.தி.மு.க.வை வழி நடத்தக்கூடிய தகுதி சசிகலாவிற்கே உள்ளது. அவர் இல்லாவிட்டால் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்திருக்காது. மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சரை தேர்வு செய்யும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா? கடந்த 15 நாட்களாக தமிழக அமைச்சர்கள் தன்னிலை மறந்து பேசுகிறார்கள். ஒருஅமைச்சர் மன்மோகன்சிங்கை தற்போதைய பிரதமர் என்றும், மற்றொரு அமைச்சர், மதுசூதனனை முன்னாள் முதல்-அமைச்சர் என்றும் கூறுகிறார். அமைச்சர்களின் செயல்பாட்டை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குரிய நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு போதிய முனைப்புடன் செயல்படவில்லை. அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்க வேண்டும்.
தேர்தல் கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் நியாயமான முடிவையே எடுக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மாவட்டசெயலாளர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.