தமிழ்நாடு

கழிவு நீர் தொட்டியில் விழுந்ததால்தான் சிறுமி உயிரிழப்பு- மருத்துவர்கள் தகவல்

Published On 2025-01-04 11:12 GMT   |   Update On 2025-01-04 11:12 GMT
  • தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
  • சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் மாணவி லியா லட்சுமியின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கழிவு நீர் தொட்டியில் விழுந்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு மருத்துவக் கல்லூரியில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News