தமிழ்நாடு

கலைஞர், முதலமைச்சர் குறித்து சீமான் பேசியதில் துளியும் உடன்பாடில்லை- டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன்

Published On 2025-01-06 18:42 IST   |   Update On 2025-01-06 18:50:00 IST
  • சீமானின் பேச்சுக்கு டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் தலைவர் வேடியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
  • இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள உறுதி அளிக்கிறேன்.

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கடந்த 4ம் தேதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அப்போது, தமிழ்தாய் வாழ்த்துக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் ஒளிக்கப்பட்டது. ஆனால், அது புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து பாடலாகும். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் பேசியதும் விமர்சனத்தை எழுப்பியது.

இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 4ம் தேதி அன்று காலை சென்னை புத்தகக் காட்சியில், சக்தி வை. கோவிந்தன் சிந்தனை அரங்கில் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறித்தும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் சீமான் பேசியதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

அதற்கான எனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்கிறேன். அதோடு, தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தினை நிராகரித்து புதுவை தமிழ்த்தாய் வாழ்த்தினை ஒலிபரப்பியதும், அதன் விளைவுகள் தெரியாமல் இருந்துவிட்டதாலும், மேடைக்கான அனுமதி பெற்றுக்கொடுத்தவன் என்ற முறையில் இவை அனைத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன்.

இதனால், பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் பபாசி அமைப்பிடமும், இதனால் மனவருத்தம் அடைந்துள்ள அனைவரிடமும் எனது மன்னிப்பு கோருகிறேன்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News