மன்மோகன் சிங்கின் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி. விஜய் வசந்த்
- 10 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பில் இருந்து ஆட்சியை நடத்தி காட்டியவர் மன்மோகன்சிங்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருவுருவ படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், "முன்னாள் பாரத பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தி அவர்கள் திருவுருவ படங்களை திறந்து வைத்தார்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, வி.சி.க தலைவர் திருமாவளவன், ம தி மு க தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உட்பட எராளமானவர்களுடன் கலந்து கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.