அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு: முன்பதிவு செய்த காளை, வீரர்கள் விவரம் வெளியீடு
- மாடுகளை பிடிக்க 5347 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
- 12,632 மாடுகள் பங்கேற்க விண்ணப்பம்.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடு அடக்கும் வீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பங்கேற்க விரும்பும் காளைகள் தொடர்பாக அதன் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட விவரங்களை மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அலங்காநல்லூரில் மாடுகளை பிடிக்க 1,698 வீரர்கள், அவனியாபுரத்தில் 1,735, பாலமேட்டில் 1,914 வீரர்கள் என மொத்தம் 5,347 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூரில் 5,786 மாடுகள், அவனியாபுரத்தில் 2,026 மாடுகள், பாலமேட்டில் 4,820 மாடுகள் என மொத்தம் 12,632 பங்கேற்க உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யாத வீரர்கள் மற்றும் மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இயலாது.