"அரசியல் தரித்திரம் சீமான்": பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
- சீமான் ஒரு மனநோயாளி, சீமானுக்கு உளவியல் பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது- திமுக எம்எல்ஏ எழிலன்.
- கொஞ்சம் கூச்சம், மானம் உள்ளவர்களிடம் ஆதாரம் கேட்கலாம். சீமானிடம் கேட்டு பயனில்லை- சுப. வீரபாண்டியன்.
கடலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு அரசியல் கடசி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாஞ்சில் சம்பத் "எந்த தத்துவ பின்புலமும் இல்லாத அரசியல் தரித்திரம் சீமான். பெரியாரை வாசித்து விட்டு விமர்சனம் செய்தால் அதை கருத்தில் கொள்ளலாம். வாசிக்காமல் தான்தோன்றித் தனமாக உளறிக் கொட்டுவது சீமானின் இயல்பு" எனக் கடுமையாக சாடியுள்ளார்.
"சீமான் ஒரு மனநோயாளி, சீமானுக்கு உளவியல் பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது. ஆதாரம் இல்லாமல் தந்தை பெரியார் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்" என திமுக எம்எல்ஏ எழிலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுப. வீரபாண்டியன் "சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது என்பதற்கு பதிலாக சர்ச்சையை ஏற்படுத்துவதற்காகவே பேசியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. பெரியாரை குறிவைத்து அல்ல. திமுக அரசை குறிவைத்துதான் இவ்வாறு பேசுகிறார் எனக் கருதுகிறேன்.
வாய்க்கு வந்ததை எல்லாம் கண்டபடி பேசினால் கலவரம் வரும். கலவரம் வந்தால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனச் சொல்லிவிடலாம் என்பது அவருக்கு உள்நோக்கமாக இருக்கலாம். அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையாக இருக்கலாம்.
இந்த கூற்றுக்கு ஆதாரம் எங்கே இருக்கிறது. கொஞ்சம் கூச்சம், மானம் உள்ளவர்களிடம் ஆதாரம் கேட்கலாம். சீமானிடம் கேட்டு பயனில்லை. நான் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவேளை அப்படி உறவு கொள்வது சீமானின் பழக்கமாக இருக்குமோ? எனத் தெரியவில்லை. பெரியார் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை.
"நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாவதால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பெரியார் போன்ற ஆளுமைகளை விமர்சிறார். பெரியார் குறித்த கருத்துகளை சீமான் திரும்பப் பெறாவிடில் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்" கான்ஸ்ட்டைன் ரவீந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.